சேலத்தில் முதியோர் இல்லத்தில் மூதாட்டி சாவு உறவினர் - காவல்நிலையத்தில் புகார்

சேலத்தில் முதியோர் இல்லத்தில் மூதாட்டி சாவு உறவினர் - காவல்நிலையத்தில் புகார்
X

மூதாட்டி சாவு

வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சேலம் அம்மாபேட்டை சிங்கமெத்தை பகுதியை சேர்ந்தவர் நீலாவதி (70). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் நீலாவதி தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தார். நேற்று அவர் திடீரென இறந்து விட்டார். இதுபற்றி அவரது உறவினரான முரளி. என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி வந்து பார்த்த அவர், இதுபற்றி கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் புகார்அளித்தார். அதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலாவதியை பார்க்க வந்தேன். அப்போது அவரை பார்க்க விடவில்லை. இந்த நிலையில் அவர் இறந்து போனதாக தெரிவித்தனர். அவரது கன்னத்தில் வீக்கம், காயம் உள்ளது. இதனால் அவரது சாவில் சந்தேகம் உள்ளது. இது பற்றி விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து கன்னங்குறிச்சி போலீசார் சந்தேகமரணம் என வழக்கு பதிவு செய்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story