தேர்தல் முன்னெச்சரிக்கை : நாகர்கோவிலில் ரவுடி கைது

தேர்தல் முன்னெச்சரிக்கை : நாகர்கோவிலில் ரவுடி கைது
பைல் படம்
நாகர்கோவிலில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை தேர்தல் முன்னெச்சரிக்கையாக போலீசார் நேற்று கைது செய்தனர்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டசபை தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடக்கிறது. தேர்தல் மிகவும் பாதுகாப்புடன், அமைதியுடனும் நடைபெற போலீசார் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டத்தில் உள்ள ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நாகர்கோவில், தளவாய்புரம் பகுதியை சேர்ந்த ஜெபின் (27) என்பவர் மீது நேசமணி நகர், சுசீந்திரம், கோட்டார் போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் ஜெபின் பெயர் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இவரை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் ராமன்புதூர் பகுதியில் வைத்து நேற்று ஜெபினை நேசமணி நகர் போலீசார் கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story