துண்டு பிரசுரங்கள் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வழியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், தபால் நிலையம், ஏ.டி.எம். மையம், சிறுவணிக கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர் மற்றும் காய்கறி சந்தை என அனைத்துப் பகுதிகளிலும் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த பேனர் அமைத்தும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வாக்குப்பதிவு குறைவாக உள்ள பகுதிகளை கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Tags

Next Story