பரமத்தி வேலூரில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி.

பரமத்தி வேலூரில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி நடைபெற்றது. 
வேலூர் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை மகளிர் திட்ட இயக்குனர் செல்வராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பரமத்திவேலூர் தாசில்தார் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். வேலூர் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி அண்ணா சிலை வரை சென்று மீண்டும் பஸ் நிலையத்தில் நிறைபெற்றது. பேரணியில் கலந்து கொண்ட பெண்கள் இந்த வஅக்களிக்கும் போது வைக்கப்படும் மை நமது தேசத்தின் வலிமை, ஒவ்வொருவரின் கடமை, என் வாக்கு என் உரிமை, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் ஊரக வளர்ச்சி மகளிர் சுய உதவிக் குழுவினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story