எரிவாயு உருளையில் ஸ்டிக்கரை ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்
பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்
எரிவாயு உருளையில் ஸ்டிக்கரை ஒட்டி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் நேர்மையாக 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி “என் ஓட்டு என் உரிமை” என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இ
தையொட்டி, “என் ஓட்டு என் உரிமை” என்னும் விழிப்புணர்வு ஸ்டிக்கரை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடிய எரிவாயு உருளையில் ஒட்டியும், வாக்காளர் உதவி மையம் இலவச தொடர்பு எண் 1950 வடிவத்தை காட்சிப்படுத்தி, புதுமையான முறையில், பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன், ஒரத்தநாடு வட்டாட்சியர் சுந்தரச் செல்வி மற்றும் பலர் கொண்டனர்.
Next Story