மருத்துவ கல்லுாரியில் தேர்தல் விழிப்புணர்வு

மருத்துவ கல்லுாரியில் தேர்தல் விழிப்புணர்வு

விழிப்புணர்வு

தனியார் மருத்துவக் கல்லுாரியில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
லோக்சபா தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தேர்தல் அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களிடையே போட்டி நடத்துவது, கிராம மக்கள் பங்கேற்கும் பேரணி, உறுதிமொழி ஏற்பது, துண்டு பிரசுரம் வழங்குவது போன்ற பல்வேறு விழிப்புணர்வு பணிகள் நடக்கின்றனர். இதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் காரைப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், நேற்று தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. கல்லுாரி மாணவ - மாணவியரிடையே 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். தேர்தலில், 100 சதவீத ஓட்டு என்பதை குறிக்கும் வகையில், ஒருங்கிணைந்து நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதில், கல்லுாரியின் முதல்வர் ராஜசேகர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story