விழுப்புரத்தில் தேர்தல் விழிப்புணர்வு மினி ஒட்டம்

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக சிறுவர் பூங்காவில் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக சிறுவர் பூங்காவில், 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் பழனி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தல் விழிப்புணர்வு குறித்த மினி நடை, ஒட்டத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார். 2024-நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டத்தில், தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை அடைந்திடும் வகையில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களிடம் பல்வேறு பகுதிகளில் துறைகளின் சார்பாக விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்றைய தினம், விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக சிறுவர் பூங்காவில், 2024-நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விளையாட்டு மாணவ, மாணவியர்களின் தேர்தல் விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தல் விழிப்புணர்வு குறித்த மினி நடை, ஒட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கி, நான்கு முனை சந்திப்பு வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் தேர்தல் பொதுப்பார்வையாளர் அகிலேஷ் குமார் மிஷ்ரா, தேர்தல் காவல்துறை பார்வையாளர் திரேந்திரசிங் குஞ்சியால், தேர்தல் செலவினப் பார்வையாளர் ராகுல் சிங்கானியா, மாவட்ட எஸ்பி., தீபக் சிவாச், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி, விழுப்புரம் நகராட்சி ஆணையர் ரமேஷ், 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story