தேர்தல் விழிப்புணர்வு-தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு

திருப்பூரில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வுக்காக காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சார்பாக கொடி அணி வகுப்பு நடைபெற்றது.
திருப்பூரில் வாக்காளர்கள் அச்சமின்றிவாக்களிப்பது குறித்த விழிப்புணர்வுக்காக காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சார்பாக கொடிஅணிவகுப்பு நடைபெற்றது. தமிழகத்தின் முதல் கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக தமிழகம் முழுவதுமே வாக்காளர்கள்அச்சமின்றி வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறை சார்பாக பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர் .இதில் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் திருமுருகல் பூண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான நெருப்பெரிச்சல் வாவிபாளையம் சேடர்பாளையம் பாண்டியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பதட்டமான வாக்குச்சாவடி உள்ள பகுதிகளில் காவல்துறை மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் சார்பாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வீரர்கள்இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story