குமாரபாளையத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்கள் 

குமாரபாளையத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.லோக்சபா தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்திட வேண்டும், ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி குமாரபாளையம் நகராட்சி முன்பு துவங்கியது.

, தாசில்தார் சண்முகவேல் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் குமரன் கொடியைத்து பேரணியை துவக்கி வைத்தார். மகளிர் திட்ட இயக்குனர் செல்வராஜ், தேர்தல் பார்வையாளர் ராஜேஷ் கண்ணன் பங்கேற்று, விழிப்புணர்வு கருத்துகள் கூறி,

வாழ்த்தி பேசினார்கள். கலைமகள் வீதி, சேலம் சாலை, இடைப்பாடி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாக சென்ற பேரணி, பஸ் ஸ்டாண்ட் வளாகம், அம்மா உணவகம் முன்பு நிறைவு பெற்றது. அங்கு வைக்கபட்ட போர்டில், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்தி அனைவரும் கையொப்பமிட்டனர்.

இதில் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று, தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாதைகள் கைகளில் ஏந்தியபடியும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்தபடியும், கோஷங்கள் போட்டபடியும் பங்கேற்றனர். நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, கல்லூரி முதல்வர் விஜயகுமார், மகளிரணியினர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story