காங்கேயத்தில்  ஆட்டோ மூலம் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகம் சார்பில் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல்அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் அறிவித்தது. இதன்படி தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் அனைத்து வாக்கு சாவடிகளிலும் 100% வாக்குபதிவைவழியுறுத்தி காங்கேயம் ஆட்டோக்களை கொண்டு‌ விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.‌ உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் கலந்து கொண்டு வரும் தேர்தலில் முழு வாக்குபதிவு அவசியம் என்பதை வலியுறுத்தி காங்கேயம் தாலுக்கா அலுவலகத்தில் துவங்கி, கோவை ரோடு, வேன் ஸ்டேண்ட் சந்து,திருப்பூர் ரோடு, பேருந்து நிலையம், சென்னிமலை சாலை, மெயின் ரோடு வழியாக மீண்டும் காங்கேயம் தாலுக்கா அலுவலகம் வரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் அனைவரும் தவறாமல் தங்களின் வாக்குகளை செலுத்த வேண்டும். 100 சதவிகித வாக்குபதிவு தான் முழுமையான அரசு அமைந்திட வழிவகுக்கும், புதிய வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்கு அளிப்பது நமது கடமை என்றும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் இந்த பேரணியில் காங்கேயம் வட்டாச்சியர் மயில்சாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஈஸ்வரன், காங்கேயம் வருவாய் ஆய்வாளர் விதுர் வேந்தன், தேர்தல் அதிகாரிகள், வட்டாச்சியர் அலுவலக பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் என சுமார் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story