ஆத்தூர் : வருவாய்துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி

ஆத்தூர் வருவாய் பட்டாச்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சார்பில் தேர்தல் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சார்பில் தேர்தலில் அனைவரும் வாக்களிக் தயாராக வேண்டும் என வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சார பேரணியை ஆர்டிஓ நேர்முக உதவியாளர் வட்டாட்சியர் காவல் ஆய்வாளர் இருசக்கர வாகன பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இதில் வருவாய் துறையில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் பங்கேற்றனர். மேலும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த பேரணியானது உடையார்பாளையம் சாரதா ரவுண்டானா புதிய பேருந்து நிலையம் ராணிப்பேட்டை வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

Tags

Next Story