கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு மணற்சிற்ப கண்காட்சி

கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு மணற்சிற்ப கண்காட்சி
X

கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு மணற் சிற்ப கண்காட்சி

விழுப்புரம் மாவட்டம், தந்திராயன்குப்பம் கடற்கரையில், 2024-நாடாளுமன்ற பொதுத்தேர்தல், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு மணற் சிற்ப கண்காட்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், தந்திராயன்குப்பம் கடற்கரையில், 2024-நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தல் விழிப்புணர்வு மணற் சிற்ப கண்காட்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

உடன் தேர்தல் பொதுப்பார்வையாளர் அகிலேஷ் குமார் மிஷ்ரா, தேர்தல் காவல்துறை பார்வையாளர் திரேந்திரசிங் குஞ்சியால், தேர்தல் செலவினப் பார்வையாளர் ராகுல் சிங்கானியா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் நித்திய பிரியதர்ஷினி, கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் புகேந்திரி, வானூர் வருவாய் வட்டாட்சியர் நாராயணமூர்த்தி, மரக்காணம் வருவாய் வட்டாட்சியர் பாலமுருகன் உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story