வணிக நிறுவனங்கள் மூலம் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு !
நாமக்கல் நகரில் உள்ள வணிக நிறுவனங்கள் மூலம் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடைவீதியில் உள்ள ஶ்ரீனிவாசா கார்ப்பரேசன் மற்றும் பரமத்தி சாலை உள்ள கண்ணா சூப்பர் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்களில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ச.உமா தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் முன்னிலை வகித்தார். கடைகளுக்கு வருகிற வாடிக்கையார்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு சம்பந்தமான துண்டு பிரசுரங்களை வழங்கி நிகழ்ச்சியினை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர், தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் அனைவருக்கும் பில் கொடுக்கும் போது அதில் தேர்தல் நாள் ஏப்ரல் 19 என பிரிண்ட் செய்தோ அல்லது ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை பதித்தோ அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளுக்கு முன்பு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் வைத்தோ அல்லது பொதுமக்கள் பார்வையில் படும்படியான ஸ்டிக்கர்களை ஒட்டியோ விழிப்புணர்வு ஏற்படுத்திட ஆலோசனைகள் வழங்கினார். னதேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி பணியாளர்கள் வாக்களிக்க ஏதுவாக வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனவும், 100 சதவிகித வாக்குப்பதிவு எனும் இலக்குடன் செயல்படும் மாவட்ட நிர்வாகத்திற்கு வணிகர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் எனவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் கேட்டுக்கொண்டார்.
இந்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னு கிருஷ்ணன், கோட்டாட்சியர் பார்த்திபன், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஸ்கண்ணா, ஶ்ரீனிவாசா கார்ப்பரேசன் உரிமையாளர் இராம சீனிவாசன், கண்ணா சூப்பர் மார்க்கெட்ஸ் உரிமையாளர் என்.வீ மாது, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன்.
வீரக்குமார், பொருளாளர் சீனிவாசன், இணை செயலாளர் தேவி உதயகுமார், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராயல் பத்மநாபன், அமைப்பாளர் அருண்குமார், செய்தி தொடர்பாளர் ராகவன், நாமக்கல் நகர செல்போன் விற்பனையாளர்கள் சங்க தலைவர் ரிஸ்வான், செயலாளர் எவரெஸ்ட் ராஜா, துணை தலைவர் கணேஷ், காய்கறி வியாபாரிகள் சங்க செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் விஜி, மோகன்ராஜ், நாமக்கல் நகராட்சி கடை வியாபாரிகள் சங்க தலைவர் மாணிக்கம், இராசிபுரம் நகராட்சி கடை வியாபாரிகள் சங்க தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட வணிகர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.