மெஹந்தி வரைந்து தேர்தல் விழிப்புணர்வு

மெஹந்தி வரைந்து தேர்தல் விழிப்புணர்வு

வாக்களிப்பு விழிப்புணர்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மெஹந்தி வரைந்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு வெளியூர் சென்று தங்கியுள்ள முதல் தலைமுறை வாக்காளர்களை 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் மெஹந்தி வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (10.04.2024) துவக்கி வைத்து பார்வையிட்டார்.அப்போது அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story