திங்கள்நகர்  பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு பிளக்ஸ் பேனர்

திங்கள்நகர்  பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு பிளக்ஸ் பேனர்

பாராளுமன்ற தேர்தலை புது விளை சானல்கரை ஊர் பொதுமக்கள் சார்பாக தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்பேனர் வைத்ததால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


பாராளுமன்ற தேர்தலை புது விளை சானல்கரை ஊர் பொதுமக்கள் சார்பாக தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்பேனர் வைத்ததால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டம் திங்கள்நகர் பஞ்சுக்குட்பட்ட புதுவிளை ஆற்று பாலம் அருகிலிருந்து மாங்குழி செல்லும் சாலையின் அருகே இரணியல் பிரிவு கால்வாய் செல்கிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சானலின் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு அப்பகுதியில் நிற்கும் மின்கம்பம் சுற்றிலும் உள்ள பகுதியில் மண் முழுவதுமாக அரிக்கபட்டு, மின்கம்பம் கீழே சாய்ந்துவிழும் நிலையில் காணப்படுகிறது.

இது சம்மந்தமாக இரணியல் மின்வாரிய அலுவலகம், திங்கள்நகர் பேரூராட்சி அலுவலகம், நெடுஞ்சாலைதுறை, பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்து நடவடிக்கை எடுக்காததாலும் 2024 ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை புது விளை சானல்கரை ஊர் பொதுமக்கள் சார்பாக தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்பேனர் வைத்ததால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் கூறும்போது, ' - மக்களின் குறைகளை பற்றி கவலைப்படாத அதிகாரிகள் தற்போது தேர்தல் விழிப்புணர்வுகள் மூலம் அனைவரையும் வாக்களிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபடுவது போல, ஓட்டு அளிக்கும் மக்களின் நிலைகளை பற்றியும் கவலைபட வேண்டும் என்று கூறினர்.

Tags

Next Story