கல்வராயன்மலை பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்

கல்வராயன்மலை பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்

தேர்தல் புறக்கணிப்பு

கல்வராயன்மலை பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர் ஒட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கல்வராயன்மலையில் அடிப்படை வசதி இல்லாததால் பொதுமக்கள் எதிர்வரும் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக கிராமப்புறங்களில் போஸ்டர் ஒட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள 15 ஊராட்சிகளில் 145 கிராமங்கள் உள்ளன. இதில் ஆரம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட கெடார், பட்டிவளவு, மனப்பாச்சி உள்ளிட்ட கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் போதிய அடிப்படை வசதி இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பலமுறை அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதி ஏற்படுத்தி தராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் எதிர்வரும் லோக்சபா தேர்தலை புறக்கணிப்பதாக கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கல்வராயன்மலை பகுதியில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்களால் பரபரப்பு நிலவி வருகிறது.

Tags

Next Story