தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்!
புறக்கணிப்பு போராட்டம்
ராணிப்பேட்டை அருகே அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக்கூறி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை சிப்காட் மணியம்பட்டு ஊராட்சியில் தொகுப்பு வீடு திட்டத்தின் கீழ் சுமார் 75-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிப்பவர்களுக்கு சாலை, கால்வாய், போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. கிராம சபை கூட்டங்களில் பலமுறை கோரிக்கை விடுத்தும் தற்போது வரை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதால் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story