பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தேர்தல் தேர்தல் பிரச்சாரம்....

பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தேர்தல் தேர்தல் பிரச்சாரம்....

 குஷ்பு 

மோடியை 29 பைசா பிரதமர் என்று விமர்சிக்கும் திமுகவினர் அவர்கொடுத்த 2 லட்சத்து 75 ஆயிரம் கோடியை என்ன செய்தார்கள் திமுகவினர் என குஷ்பு பேச்சு.

திருப்பத்தூர் மாவட்டம் மோடியை 29 பைசா பிரதமர் என்று விமர்சிக்கும் திமுகவினர் அவர்கொடுத்த 2 லட்சத்து 75 ஆயிரம் கோடியை என்ன செய்தார்கள் திமுகவினர் என ஆலங்காயம் பகுதியில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பூ பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தேர்தல் தேர்தல் பிரச்சாரம்.

நாடாளுமன்ற தேர்தல் வேலூர் மக்களவைத்தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு இன்று திருப்பத்தூர் மாவட்டம்.. வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டார்.. அப்பொழுது பேசிய அவர் மோடி 10 வருட ஆட்சியில் தமிழகத்திற்கு மட்டும் அள்ளி கொடுத்துள்ளார். ஆனால் திமுகவினர் பிரதமரை 29 பைசா பிரதமர் என விமர்சிக்கின்றனர்.

நான் ஒரே ஒரு கேள்விகேட்கிறேன், தமிழகத்திற்கு மட்டும் 2 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயை கொடுத்து இருக்கிறார், அதனை திமுகவினர் என்ன செய்தார்கள் என கேள்வி எழுப்பினார்.. மோடி உலகின் எந்த நாடுகளுக்கு சென்றாலும் தமிழ் மொழி, கலச்சாரம் பற்றி பேசாமல் இருந்தது, கிடையாது, மேலும் மந்திரியின் மகன் சொல்கிறார்கள், ஆயிரம் ரூபாய் வந்ததால், மின்மினுக்கிறீர்கள் என்று கூறுகிறார்.

அவர்களது குறைகளை மறைக்க ஆயிரம் ரூபாயை பெண்களுக்கு கொடுத்துள்ளனர், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் சரியில்லை, தமிழ்நாடு சிறந்த ஆட்சியில் முதலிடம் என்று கூறுகிறார்கள் ஆனால் கடன் வாங்குவதில் தான் தமிழ்நாடு தற்போது முதலிடமாக உள்ளது.

8 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்று இருக்கிறார்கள். மக்களுக்கு என்ன செய்து இருக்கிறார்கள்.. அவர்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள் என பேசினார்.மேலும் இந்த தேர்தல் பிரச்சாரத்தில், பாஜக, புதிய நீதிகட்சி, பாமக மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story