அவிநாசி பகுதியில் திமுக வேட்பாளர் ஆ ராசா தேர்தல் பரப்புரை

திருப்பூர் மாவட்டம், அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நீலகிரி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் ஆ ராசா தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

மீண்டும் பாசிச பாஜக ஆட்சி இந்தியாவில் வரும் நிலையில் தற்போது நடைபெறும் பொதுத் தேர்தலே கடைசி தேர்தல் ஆக இருக்கும் என நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ ராசா பொதுமக்களிடம் உரை நிகழ்த்தினார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் நீலகிரி நாடாளுமன்ற வேட்பாளர் ஆ ராசா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட திமுகவினர் வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்தனர்.

அதன்படி பொங்கலூர் கானூர்புதூர், ஆலத்தூர், சாவக்கட்டுபாளையம் திருமலைகவுண்டன்பாளையம், துலுக்கமுத்தூர், திருமுருகன்பூண்டி தெக்கலூர் உள்ளிட்ட அவினாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒன்றியப் பகுதிகளில் உள்ள கிராமம் கிராமமாக சென்று அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

சென்ற இடமெல்லாம் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ.ராசாவுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மலர்களைத் தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய திமுக துணை பொது செயலாளர், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான ஆ.ராசா, பிரதமர் மோடி ஒரே தேர்தல் ஒரே மொழி என ஆர் எஸ் எஸ் பாஜகவின் பாசிச நிலைகளை அரங்கேற்ற துடித்துக் கொண்டிருக்கிறார் அதற்கு ஒரு காலம் வழி விடக்கூடாது.

இதனை தடுக்கும் வகையில் மக்களை காப்பாற்றக்கூடிய தமிழக மக்களுக்கு மட்டுமல்ல அது இந்திய மக்களுக்காக உழைக்கக்கூடிய ஒற்றைத் தலைவராக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திகழ்கிறார் என ஆ ராசா பெருமிதம் தெரிவித்தார் கடந்த மூன்று ஆண்டு கால ஆட்சியில் பெண்களின் வாழ்வாதாரம் சிறக்கும் வகையில் ஒரு சிறப்பான ஆட்சியை தந்திட்ட மு க ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை புதுமைப்பெண் திட்டம் வீடு தேடி மருத்துவம் இல்லம் தேடி கல்வி என பல்வேறு திட்டங்களை படிப்படியாக செயல்படுத்தி அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார்.

தொடர்ந்து அவர் கரத்தை வழிபடுத்திக் கூடிய வகையில் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என வாக்கு சேகரித்தார் ஒன்றிய பாஜக அரசு மதத்தை வைத்து அரசியல் செய்கிறது அதன் காரணமாகவே மணிப்பூரில் ரத்த ஆறு ஓடியதாகவும் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும், மதத்தால் மக்களை பிளவுபடுத்துகிற ஒன்றிய பாஜக அரசு ஆட்சியை விட்டு துரத்தப்பட வேண்டும் என ஆ.ராசா பேசினார்.

Tags

Next Story