ராசிபுரத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தோ்தல் பிரச்சாரம்..

ராசிபுரத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் வி எஸ் மாதேஸ்வரனை ஆதரித்து அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தோ்தல் பிரச்சாரம்..
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் குறைகள் கண்டிப்பாக களையப்படும் ... தகுதி உள்ள மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் - இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் டோல்கேட் இருக்காது.. நாமக்கல் மாவட்டத்தில் 8 கோடி இலவச பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். ராசிபுரத்தில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூட்டணி வேட்பாளர் வி எஸ் மாதேஸ்வரனை ஆதரித்து பிரச்சாரம்.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலைய பகுதியில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த வி எஸ் மாதேஸ்வரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசுகையில், 2014 ஆம் ஆண்டு கேஸ் சிலிண்டர் விலை 450 ரூபாய் இருந்தது. தற்போது கேஸ் சிலிண்டர் விலை 1200 ரூபாய். உங்களை ஏமாற்றுவதற்காக தேர்தல் வருகிறது என்று நூறு ரூபாய் குறைத்துள்ளார் மோடி. மோடி தேர்தல் நாடகம் ஆடுகிறார் ஏமாந்து விடாதீர்கள். இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் கேஸ் சிலிண்டர்களை 500 ரூபாய் தரப்படும் என நம் தலைவர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அதேபோல், பெட்ரோல் லிட்டர் 75 ரூபாய்க்கும், டீசல் 65 ரூபாய்க்கு தருவோம் என தலைவர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். முக்கியமான வாக்குறுதியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டோல்கேட்டுகளும் அகற்றப்படும் என வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இது எல்லாம் செய்வார் என நம்பிக்கை இருக்கிறதா. எப்படி நம்பிக்கை வருகிறது என்றால் 2021ல் எப்படி நம் தலைவர் முதல்வர் ஆனார். யார் காலையாவது பிடித்து தவழ்ந்து முதல்வரானாரா? யார் தவழ்ந்து முதல்வர் ஆனார் என்பது உங்களுக்கே தெரியும். நம் தலைவர் மக்களை சந்தித்து, மக்களின் ஓட்டை பெற்று, மக்களை அன்பை பெற்று முதல்வரானவர். கடும் நெருக்கடியாக இருந்த போதும் கூட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றினார் நம் தலைவர். முதல் நாளே பெட்ரோல் விலை மூன்று ரூபாய் குறைத்தார். மகளிருக்கு பேருந்து இல்லா கட்டண திட்டத்தை கொண்டு வந்தார். இதனால் ஒவ்வொரு மகளிரும் மாதம் தோறும் 900 ரூபாய் சேமிக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் 460 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 8 கோடி பயணங்களை மகளிர் இலவசமாக மேற்கொண்டுள்ளனர். தற்போது யாரும் அதனைப் பிங்க் பஸ் என அழைப்பதில்லை. ஸ்டாலின் பஸ் எனவே அழைக்கின்றனர். பெண்கள் படிக்க வேண்டும் என புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்தார் நம் தலைவர். பள்ளி படிப்பை முடித்து கல்லூரியை சேர்ந்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக மாதம் மாதம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 3 லட்சம் மாணவிகள் பயன் பெறுகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 16 ஆயிரம் மாணவிகள் பயன் பெற்று வருகிறார்கள். இந்தியாவிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்ட திட்டம் காலை உணவு திட்டம். இந்த திட்டத்தை அருகே உள்ள கர்நாடகா தெலுங்கானா மாநிலங்கள் விரிவுபடுத்தி உள்ளன. தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள காலை உணவு திட்டம் நல்ல திட்ட என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். இதனை கனடா நாட்டில் செயல்படுத்தப்பட உள்ளோம் என தெரிவித்துள்ளார். தமிழகம், இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களை விரிவுபடுத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தில் 44 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். மகளிர் உரிமை திட்டத்தில் 1 கோடியே 16 லட்சம் மகளிர் விண்ணப்பம் செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் 3 லட்சம் மகளிர் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வாங்கி வருகின்றனர். இதில் உள்ள குறைகள் கண்டிப்பாக நிவர்த்தி செய்யப்பட்டு தகுதி உள்ள மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்தியாவைப் பத்து ஆண்டுகள் ஆண்ட பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு ஏதேனும் செய்தாரா. பாஜக ஆளும் ஐந்து மாநிலங்களில் கட்டி முடித்து விட்டனர். ஆனால் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மற்றும் நிதி தர மறுக்கிறார்கள். ஒன்றிய பிரதமர் மோடி அவர்களை இனிமேல் மோடி என பெயர் சொல்லி அழைக்காதீர்கள். அவருக்கு ஒரு பெயர் வைத்துள்ளேன். அவரை இனிமேல் அத்தனை பேரும் மிஸ்டர் 29 பைசா என்றே அழைக்க வேண்டும். ஏனென்றால், தமிழ்நாட்டில் இருந்து ஜிஎஸ்சி கட்டுகிறோம். நாம் ஒரு ரூபாய் ஜிஎஸ்டி கட்டினால் ஒன்றிய அரசு 29 பைசாவை மட்டுமே திருப்பி தருகிறது. இதே பாஜக ஆளும் மாநிலமான உத்திர பிரதேசத்திற்கு மூன்று ரூபாய் தருகிறது; பீகாரருக்கு ஏழு ரூபாய் தருகிறது. நம் தலைவர் 29 பைசாவை வைத்துக்கொண்டு இவ்வளவு திட்டங்களை செய்துள்ளார். நமக்கு நல்லது செய்யக்கூடிய ஒரு ஒன்றிய பிரதமர் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில் நம்முடைய தலைவர் யாரை கை காட்டுகிறாரோ அவரை அடுத்த பிரதமராக கொண்டு வந்தால் மட்டுமே நம் மாநிலத்தை இந்திய அளவில் முதலிடத்திற்கு மாற்றி காட்டுவார் நம் தலைவர். அது உங்கள் கைகளில் தான் உள்ளது. கூட்டத்திற்கு வந்தோம் சென்று விட்டோம் என்று இல்லாமல், ஒவ்வொருவரும் பொறுப்பு எடுத்துக்கொண்டு மூன்று ஆண்டு சாதனையை எடுத்துக் கூறி பிரச்சாரத்தை ஒவ்வொரு வீடு, வீடாக கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான், மாதேஸ்வரன் குறைந்தது 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். ஜூன் மூன்றாம் தேதி முத்தமிழ் கலைஞர் அவர்கள் 101 வது பிறந்த நாள். 40க்கு 40 தொகுதியும் வெற்றி பெற்று கலைஞர் காலடியில் பிறந்தநாள் பரிசாக வைக்க வேண்டும். அதுவே அவருக்கு நாம் செய்யும் சிறப்பு. தலைவரின் மகனாக கேட்கிறேன், கலைஞரின் பேரனாக கேட்கிறேன் ஆதரிப்பீர் உதயசூரியன் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் மாவட்ட கழக செயலாளர் கே ஆர் என் ராஜேஷ்குமார், அமைச்சர் மா.மதிவேந்தன், ராசிபுரம் நகர கழக செயலாளர் என். ஆர். சங்கர், தேர்தல் பொறுப்பாளர் பாலச்சந்தர்,ஒன்றிய கழக செயலாளர் கே. பி. ஜெகநாதன், கே பி ராமசாமி , ஆர்.எம். துரைசாமி, நகர மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர்.கவிதா சங்கர், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த விசிக மாவட்ட செயலாளர் மும்பை அர்ஜுனன், காங்கிரஸ் நகரத் தலைவர் ஸ்ரீராமுலு ஆர். முரளி, முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பாச்சல் சீனிவாசன், மற்றும் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி நிர்வாகிகள், இளைஞரணி, மகளிர் அணி, வார்டு கழக செயலாளர், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story