விருதுநகர் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தேர்தல் பிரச்சாரம் !

விருதுநகர் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தேர்தல் பிரச்சாரம் !

மாணிக்கம் தாகூர்

இந்தியாவிற்கு மிக முக்கியமான பிரச்சினையாக இருப்பது வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு இல்லாத இந்தியாவாக மோடி உருவாக்கி விட்டார். - விருதுநகர் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பேசினார்.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக இந்திய கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஹார்விப்பட்டி மற்றும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருடன் திமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாண்டியன், மாமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் உடனிருந்து வாக்கு சேகரித்தனர். தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய வேட்பாளர் மாணிக்கம் தாகூர் கூறுகையில் : வரும் 19 ஆம் தேதி பிரதமரை தேர்ந்தெடுக்கின்ற தேர்தல் மோடி பிரதமர் ஆகும்பொழுது 450 ரூபாய் ஆக இருந்த கேஸ் சிலிண்டர் விலை இப்போது எவ்வளவு உயர்த்தி இருக்கிறார் என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியதற்கு 1200 ரூபாய் என்று கூறினர்.

மோடியை பொருத்தளவில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதில் இந்திய அரசுக்கு கிடைத்த லாபம் 26 லட்சம் கோடி ரூபாய். 17 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் தள்ளுபடி செய்துள்ளனர். உங்களிடம் வாங்கிய பணத்தை பெரிய பணக்காரர்களுக்கு கொடுக்கிறார்கள். 500 ரூபாய்க்கு சிலிண்டர் கொடுப்போம் என்று முதல்வர் சொல்லியுள்ளார்.

இந்தியாவிற்கு மிக முக்கியமான பிரச்சினையாக இருப்பது வேலைவாய்ப்பு., வேலைவாய்ப்பு இல்லாத இந்தியாவாக மோடி உருவாக்கி விட்டார். மத்திய அரசின் வேலை வாய்ப்புகள் 30 லட்சம் காலியாக உள்ளது. ராகுல் காந்தி பிரதமர் ஆனால் புதிதாக 30 லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறினார்.

மேலும் ராகுல் காந்தி பிரதமர் ஆனால் மகாலட்சுமி திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் பெண்களுக்கு வழங்கப்படும். பெண்களிடம் காசு இருந்தால் அந்த வீடு நலமா இருக்கும் வீடு நலமா இருந்தா மாவட்டம் நலமாக இருக்கும் மாவட்ட நலமாக இருந்தால் மாநில நலமாக இருக்கும் மாநிலம் நலமாக இருந்தால் அந்த நாடு நலமாக இருக்கும் அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் ஒரு அண்ணனாக ஒரு தந்தையாக தமிழ்நாட்டுப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்.

அப்போது கூட்டத்தைப் பார்த்து இன்னும் மகளிர் உரிமை தொகையை வாங்காதவர்கள் கை தூக்கவும் என்று கூறினார் அப்போது கை தூக்கிய பெண்களிடம் தமிழ்நாட்டில் ஒரு கோடியே 15 லட்சம் பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்படுகிறது கை தூக்கி 16 பெண்களுக்கும் நிச்சயமாக வழங்கப்படும் என்று கூறி கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் மக்களிடம் வாக்கு சேகரிக்கும் முன்பு கூட்டணி கட்சிகளின் பெயரை ஒவ்வொன்றாக சொல்லி வரும்போது மக்கள் நீதி மையம் கட்சியின் பெயரை கூற வரும்பொழுது மனித நீதி மையம் என தடுமாறி தடுமாறி மக்கள் நீதி மையம் என்று கூறினார்.

Tags

Next Story