தேர்தல் நடத்தை விதிகள் - குறட்டை விடும் நுகர் பொருள் மண்டல அலுவலகம்
அகற்றப்படாத பதாகைகள்
இந்திய நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்து அது முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக அறிவித்து பல்வேறு தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து விளக்கம் அளித்தார். அவ்வகையில் தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் வேட்பு மனு பெறுதல் , வேட்பு மனு தாக்கல், பரிசீலனை திரும்ப பெறுதல் என பல்வேறு நிலைகள் குறித்த கால அட்டவணையும் வெளியிட்டுள்ளது.
மேலும் தேர்தல் நன்னடத்தை விதிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமலுக்கு வந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரம் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாது தேர்தல் நன்னடத்தை விதிகளில் முதல் கட்டமாக தமிழக அரசின் செயல் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் பதாகைகள் உள்ளிட்ட அனைத்தையும் அகற்றப்பட்டது.
அரசு அலுவலகங்களில் உள்ள முதல்வர் படம் உள்ளிட்ட அனைத்தும் அகற்றப்பட்டு இதுகுறித்து பிற அரசு அலுவலகங்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.! 90 சதவீதத்திற்கு மேல் அலுவலகங்களில் உள்ள அரசு சாதனைகள் மற்றும் முதல்வர் படம் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடுத்த செவிலிமேடு அருகே செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிப மண்டல அலுவலகத்தில் முதல்வரின் சாதனைப்பதாகைகள் தற்போது வரை தொங்கவிடப்பட்டு உள்ளது.