பரமத்தி வேலூர் : தலைவர்களின் சிலைகள் மூடல்,கொடிக்கம்பங்கள் அகற்றம்
தலைவர்களின் சிலைகளை துணியால் மூடும் பணியாளர்கள்
பாராளுமன்ற தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் கமிசன் சில நிபந்தனைகள் அறிவித்துள்ளது. அந்த வகையில் தேர்தல் முடியும் வரை அனுமதி இல்லாத சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் அழிக்க வேண்டும், தலைவர்கள் சிலைகள் மறைக்கப்பட வேண்டும், கொடிக்கம்பங்கள் அகற்ற வேண்டும் என உத்தரவு பிறபித்துள்ளது.
இந்த உத்தரவால் பரமத்தி வேலூர் தாலுக்கா பகுதிகளில் உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளில் அந்தந்த நிர்வாகத்தினர் தலைவர்கள் சிலைகள் மூடப்பட்டும்,சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டு,கொடிக்கம்பம் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர் பேரூராட்சி பகுதிகளான அண்ணாசாலை,நான்கு ரோடு பகுதி,மோகனூர் சாலை,சூப்பர் மார்கெட் நான்கு ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள தலைவர் சிலைகள்,கொடி கம்பங்கள்,சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றை பேரூராட்சி நிர்வாகத்தினர் மூடப்பட்டும்,அகற்றியும் வருகின்றனர்.