தேர்தல் கலந்தாய்வு கூட்டம்!
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் செலவின பார்வையாளர்கள் கிரண் (உதகமண்டலம், கூடலூர் மற்றும் குன்னூர்) சந்தீப் குமார் மிஸ்ரா (அவினாசி, மேட்டுப்பாளையம் மற்றும் பவானிசாகர்) ஆகியோர் தலைமையில் தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பான கலந்தாய்வுக்கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் அருணா முன்னிலை வகித்தார். தேர்தல் செலவின பார்வையாளர் கிரண் கூறுகையில்,"இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024ஐ சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் என பல்வேறு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். ** இவர்கள் அனைவரும் தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் உள்ளதை உணர்ந்தும், தங்களது பொறுப்புக்களை உணர்ந்தும் நேர்மையாக பணியாற்ற வேண்டும். ஏனெனில் எதாவது தவறுகள் ஏற்பட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும். அதேபோல தேர்தல் பணியாற்றுகிறவர்கள் யாருக்கும் பயப்படக்கூடாது.
தங்களுக்கு ஏதேனும் குறைகள், கோரிக்கைகள் இருந்தால் தயங்காமல் எங்களிடம் தெரிவிக்கலாம். அனைவரும் சிறப்பாக பணிபுரிய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,"என்றார். அதனைத் தொடர்ந்து, தேர்தல் செலவின பார்வையாளர்சந்தீப் குமார் மிஸ்ரா பேசுகையில்," இந்திய தேர்த் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்தவுடன் அனைவருக்கும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளீர்கள் என்பதை மனதில் நிறுத்தி பணிபுரியவேண்டும். குறிப்பாக, பறக்கும் படைக்குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் உட்பட கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அனைவரும் சோதனைச் சாவடிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனையினை முறையாக மேற்கொள்ள வேண்டும். தேர்தல் செலவினகணக்குகளை உரிய முறையில் கண்காணித்து, சம்மந்தப்பட்ட வேட்பாளர் கணக்கில் பதிவேற்ற வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பணியாற்ற நியமிக்கப்பட்டவர்கள் தேர்தல் விதிமுறைகள் குறித்து நன்கு அறிந்து, விழிப்புணர்வோடு உள்ளனர். தேர்தல் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி நன்றாக பணிபுரிய வேண்டும்,"என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்