கலெக்டர் தலைமையில் தேர்தல் கலந்தாய்வு கூட்டம்
கலந்தாய்வு கூட்டம்
கலெக்டர் தலைமையில் தேர்தல் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தல்பணிகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த கண்காணிப்பு அலுவலர்களுடான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசுகையில்:- நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை மிக சிறப்பாக நடத்தி முடித்திட அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும், புதிதாக இணைந்துள்ள மற்றும் இணையவுள்ள முதல் வாக்காளர்கள் அனைவரையும் தவறாது வாக்களிக்க வைப்பதோடு, 100 சதவீதம் வாக்களித்த வாக்காளர்கள் நிறைந்த மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் திகழ மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார். நடைபெற்ற கூட்டத்தில் துணை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, ஜாண் ஜெகத் பிரைட் (மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்), உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
Next Story