திருப்பத்தூர் : தேர்தல் ஆலோசனை கூட்டம்
ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பதட்டமான வாக்கு சாவடி மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தேர்தல் 2024 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை இன்று வெளியிட்டு உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் தேர்தல் அறிவிப்பு மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான், வருவாய்துறையினர், காவல்துறையினர் ,தேர்தல் ஆணையத்தை சேர்ந்த அதிகாரிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர். மேலும் வேட்மனுதாக்கல் செய்ய மார்ச் 20ஆம் தேதி தொடங்கப்பட்டு மார்ச் 27 நம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் வேட்புமனுதாக்கல் பரிசீலனை மார்ச் 28ந்தேதி நடைபெற உள்ளது. மேலும் வேட்புமனுதாக்கல் திரும்ப பெற கடைசி நாளாக மார்ச் 30ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் நகர பகுதியில் உள்ள அவ்வைநகர் அரசு தொடக்கப்பள்ளி, கௌதமபேட்டை பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, தனியார் பள்ளியான லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்னகடைதெரு பகுதியில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளி உள்ளிட்ட பதட்டமான வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான், வருவாய்த் துறையினர் ஆகியோர் நேரில்ஆய்வு மேற்கொண்டனர்.