நாகப்பட்டினம்: காவல்துறை சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

நாகப்பட்டினம்:  காவல்துறை சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனை கூட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மற்றும் புகையிலைப் பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்துதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் முன்னிலையில் வரவிருக்கும் 2024 பாராளுமன்ற பொது தேர்தலை பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, அதேபோல் தேர்தல் பாதுகாப்பிற்காக வரவிருக்கும் பாதுகாப்பு படையினருக்கு தேவையான தங்கும் இட வசதிகள் ஏற்பாடுகள் செய்வது குறித்தும், நாகை மாவட்டத்தில் பெருகி வரும் போதை பொருட்களை கட்டுப்படுத்துதல் சம்பந்தமாகவும்,தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவ வீரர்கள் முன்னாள் காவல்துறையினர்,NSS, NCC, போன்றவர்களை தேர்தல் பணிக்காக இணைப்புகள் சம்பந்தமாகவும், அதேபோல் காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து கலந்தாய்வு ஆலோசனைகள் கூட்டம் நடைபெற்றது,

மேலும், நாகை மாவட்டத்தில் பதட்டமான இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை வலுப்படுத்தவும், வாக்கு சாவடிகளில் பிரச்சனைக்குரிய காரணங்களை அந்தந்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளும், உளவு பிரிவு காவல் துறையினரும் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறினார்கள். மேலும் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடியாக விரைந்து முடிக்கும்படி உத்தரவு பிறப்பித்தார்கள், மேலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் பணிகளில் அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும் விரைந்து முடிக்க வேண்டு என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

சிறப்புடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாகை மாவட்ட காவல் நிலையத்தில் உள்ள காவல் நிலைய அதிகாரிகளும், அனைத்து காவல் நிலைய எழுத்தர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story