ஜூன் 30க்குள் தேர்தல் செலவின கணக்கை தாக்கல் செய்யவேண்டும் - ஆட்சியர்
ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி ஜாம் பாக்கிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் – 2024 இல் 29, நாகப்பட்டினம் பாராளுமன்றத் தொகுதி (தனி), போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தனது தேர்தல் செலவினக் கணக்குகளை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 ஆம் நாளுக்குள் ஒப்படைக்க வேண்டும்.
அதற்கான தேர்தல் செலவு கணக்குகள் ஒத்திசைவு கூட்டம் எதிர்வரும் 30.06.2024 அன்று காலை 10:00 மணியளவில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் முன்னிலையில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது என்றும் வேட்பாளர்கள் ,முகவர்கள் கடந்த 26.06.2024 அன்று நடைபெற்ற தேர்தல் செலவின கணக்குகள் தாக்கல் செய்வதற்கான பயிற்சிக்கூட்டத்தில் தெரிவித்துள்ளவாறு உரிய ஆவணங்களுடன் தேர்தல் செலவின ஒத்திசைவு கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானிடாம் வர்கீஸ், தெரிவித்துள்ளார்