விழுப்புரத்தில் தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

விழுப்புரத்தில்  தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

ஆய்வில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி 

விழுப்புரத்தில் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் சித்த ரஞ்சன் தாங்கடா மஜ்ஹி ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்காக விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளராக சித்த ரஞ்சன் தாங்கடா மஜ்ஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். இதையடுத்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவரிடம் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சி.பழனி, தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் பணிகள் குறித்து எடுத்துரைத்தார். அதாவது தேர்தல் நடத்தை விதிகள் பின்பற்றப்பட்டுள்ள விவரம், பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களின் விவரம், அக்குழுவால் கைப்பற்றப்பட்ட பணம், பொருட்களின் விவரம், பதற் றமான, மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்டவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விழுப்புரம் தொகுதி தேர்தல் அறிவிப்பு படிவம் 1-ஐ கலெக்டர் பழனி கையெ ழுத்திட்டு வெளியிட்டார். பின்னர் அந்த படிவத்தை தேர்தல் விளம் பர பலகையில் ஒட்டப்படுவதையும் அவர் பார்வையிட்டார். அப்போது கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திண்டிவனம் சப்-கலெக்டர் திவ்யான்ஷூ நிகம், வருமான வரித்துறை துணை இயக்குனர் உத்தரா ராஜேந்திரன், மாவட்ட வருமான வரித் துறை உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story