ஊடகச்சான்று மற்றும் கண்காணிப்பு மையத்தை தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு

ஊடகச்சான்று மற்றும் கண்காணிப்பு மையத்தை தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு

ஊடகச்சான்று மற்றும் கண்காணிப்பு மையத்தை தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் இந்திய நாடாளுமன்ற பொது தேர்தல் பணிகள் ஒரு பகுதியாக ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு மையத்தினை தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.

இந்திய பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி இ.ஆ.ப., முன்னிலையில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர்கள் சந்தோஷ்குமார், ஐ.ஆர்.எஸ் பெங்களுரு துணை ஆணையர் (சுங்கம்) பிரமோத்நாயக், ஐ.ஆர்.எஸ்., ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பிரகாசம், நல்லம்பள்ளி வட்டாட்சியர் பார்வதி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story