தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழு வாகனங்கள் ஆட்சியர் ஆய்வு

தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழு வாகனங்கள் ஆட்சியர் ஆய்வு

ஆய்வு மேற்கொண்ட போது

மதிகோன்பாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழு வாகனங்கள் ஆய்வு செய்ததை கலெக்டர் கி.சாந்தி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19.ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது தேர்தல் ஆணையம் நேற்று மாலை தேர்தல் நடத்தை விதிகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டவுடன் தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் அதற்கான பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கி.சாந்தி. தலைமையில் நடைபெற்று வருகிறது.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு தேர்தல் நடைமுறைகள் குறித்து நேரில் விளக்கப்பட்டது. நேற்று முதல் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இன்று மதியம் ஒரு மணி அளவில் தருமபுரி மதிகோண்பாளையம் ராமக்காள் ஏரி,ஆகிய இடங்களில், பாராளுமன்றத் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழு வாகனங்கள்ஆய்வு செய்ததை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, அவர்கள் பார்வையிட்டார்.

இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர்பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் காயத்ரி வில்சன் ராஜசேகர், மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி காவல் துணை கண்காணிப்பாளர் சிவராமன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பொதுப் பணித்துறை உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Tags

Next Story