திருமருகல் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்பதில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தீவிரமாக செயல்பட துவங்கி உள்ளனர்.அனைத்து மாவட்டங்களிலும், தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு சட்ட மன்ற தொகுதிக்கும் பறக்கும் படை,நிலைக்குழு,கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.நேற்று, நாகப்பட்டிணம் சட்டமன்ற தொகுதியில் அடங்கிய நாகூர் - கங்களாஞ்சேரி சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர்.அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் சோதனை செய்தனர். 50,000 ரூபாய்க்கு மேல் பணம், அதிக எண்ணிக்கையில் பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என சோதனை செய்யப்பட்டது.