அடிப்படை வசதிகள் உறுதி செய்ய தேர்தல் பொது பார்வையாளர் வலியுறுத்தல்

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் தேர்தல் பொது பார்வையாளர் வலியுறுத்தினார்.

பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் தேர்தல் பொது பார்வையாளர் வலியுறுத்தல் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் கங்குராஜ் பங்கட் பாபநாசம் வட்டாச்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் நேரடியாக கலந்துரையாடினார் இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தார் மேலும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு குடிநீர் கழிப்பிட வசதி மாற்று திறனாளி வாக்காளர்களுக்கு சக்கர நாற்காலி வசதி ஆகிய அனைத்து அடிப்படை வசதிகளும் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணியின் முக்கியம் குறித்து விளக்கப்பட்டு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது இக்கூட்டத்தில் பாபநாசம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் தேர்தல் துணை வட்டாட்சியர் விவேகானந்தன் துணை வட்டாட்சியர்கள் பிரபு தமயந்தி அன்புக்கரசி மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் கிராம உதவியாளர்களும் கலந்து கொண்டனர் பின்னர் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையினை தேர்தல் பொது பார்வையாளர் பார்வையிட்டார்

Tags

Next Story