வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்ட தேர்தல் பொது பார்வையாளர்
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல்19-ம் தேதி நடைபெறுகிறது. விருதுநகர் மக்களவை தொகுதியில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இங்கு பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் அதனுள் வாக்குப் பதிவை உறுதி செய்யும் இயந்திரம் (விவிபாட்) வைக்கப்படும் அறைகள், வாக்குப் பதிவு முடிந்து வாக்குச் சாவடிகளிலிருந்து வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான காப்பறைகள்,தபால் வாக்குகள் எண்ணப்படும் அறை, தேர்தல் பார்வையாளார் அறை, தேர்தல் நடத்தும் அலுவலர் அறை, ஊடக மையம் உள்ளிட்டவை குறித்தும், ஒவ்வொரு தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்துக்கும் வேட்பாளர்களின் முகவர்கள் சென்றுவரும் பிரத்யேக வழிகள், காவல் துறையால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்து, வாக்கு எண்ணும் பணியினை சிறப்பாக மேற்கொள்வதற்கு தேவையான அத்துணை அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் செய்வதற்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை தேர்தல் பொதுப்பார்வையாளர், ஒருங்கிணைந்த காவல்துறை பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு காவல் துறையால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்து, வாக்கு எண்ணும் பணியினை சிறப்பாக மேற்கொள்வதற்கு தேவையான அத்துணை அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் செய்வதற்கு உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை தேர்தல் பொதுப்பார்வையாளர், ஒருங்கிணைந்த காவல்துறை பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு வழங்கினார்கள்.