விருதுநகரில் தேர்தல் விடுமுறை: புகார் அளிக்க ஏற்பாடு

விருதுநகரில் தேர்தல் விடுமுறை: புகார் அளிக்க ஏற்பாடு
மாவட்ட ஆட்சியர் 
விருதுநகரில் தேர்தல் விடுமுறை அளிக்காதது குறித்து புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவை பொதுத் தேர்தல் 2024 மற்றும் வரும் 19 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் அனைத்து வகை பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சென்னை, தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் சென்னை, தொழிலாளர் ஆணையர் டாக்டர். அதுல் ஆனந்த் ,

தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள், மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்;கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் உட்பட அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி,

தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும், வாக்களிக்கும் பொருட்டு வாக்கு பதிவு நாளான 19.04.2024 (வெள்ளிக் கிழமை) அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வர்த்தகர் சங்கங்;களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டத்தில், தேர்தல் தினமான 19.04.2024 அன்று மேற்படி தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காதது தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு ஏதுவாக விருதுநகர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையில்,

அவரது ஆட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளுக்கான தேர்தல் கட்டுப்பாட்டு அறை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு தேர்தல் தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படாதது தொடர்பான புகார்களை விருதுநகர்,

தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்- 04562 - 252130, District Nodal Officer / தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) விருதுநகர் தொலைபேசி எண்கள் -94453-98763, 98652-54003, உறுப்பினர் / தொழிலாளர் துணை ஆய்வாளர், விருதுநகர் - 89398-62505, உறுப்பினர் / முத்திரை ஆய்வாளர், விருதுநகர்- 91594-43377 ஆகிய தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story