மதுரை விமான நிலையத்தில் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரம்

மதுரை விமான நிலையத்தில் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரம்

 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மதுரை விமான நிலையத்தில் வருமானவரித்துறை சார்பில் ஆவணங்களின்றி கொண்டுவரப்படும் பண பரிவர்த்தனையை தடுக்க அதிகாரிகள் குழு ஆய்வு நியமிக்கப்பட்டுள்ளது நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பண பரிவர்த்தனைகளை தடுக்க வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் வருமானவரித்துறை சார்பில் துணை இயக்குனர் கார்த்திகேயன் ஐ ஆர் எஸ் தலைமையில் வருமானவரித்துறை அலுவலர் செந்தில் வேல் ஆய்வாளர் வேல்முருகன் முதுநிலை வரி கணக்கீட்டாளர் ஆகிய நான்கு பேர் கொண்ட குழுவினர் சுழற்சி முறையில் மதுரை விமான நிலையத்தில் பணியில் ஈடுபடுவார்கள்.

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பண பரவிவர்த்தனைகள் நடைபெறாமல் தடுக்கவும் கண்காணிப்பு முறை முயற்சியில் செயல்படவும் வருமான வரித்துறை சார்பில் நான்கு அதிகாரிகள் மதுரை விமான நிலையத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர் பயணிகளிடமிருந்து கொண்டு வரப்படும் பணம் குறித்து உரிய ஆவணங்கள் இருப்பின் அவை சரிபார்த்து விடுவிக்கவும் ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்படும் பண பரிவர்த்தனையை சோதனைகள் மூலம் தடுக்கவும் வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

Tags

Next Story