தேர்தல் பார்வையாளர் தேர்தல் பணிகள் குறித்து நேரில் ஆய்வு
தேர்தல் பார்வையாளர் ஆய்வு
திருச்சி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் எம். தினேஷ்குமார் புதுக்கோட்டை மற்றும் கந்தர்வகோட்டை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள், விடியோ கண்காணிப்புக்குழுக்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள், பிடிக்கப்பட்டுள்ள பணம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இருப்பு, ஒதுக்கீடு, தேர்தல் பணியாளர் ஒதுக்கீடு, ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
வாக்குப்பதிவின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் தேர்தல் பார்வையாளர் கேட்டறிந்தார். ஆலோசனைகளையும் வழங்கினார்.இந்த ஆய்வின்போது, மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ஐ.சா. மெர்சி ரம்யா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மா. செல்வி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், நேர்முக உதவியாளர் (தேர்தல்) எஸ். வெங்கடாசலம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.