நாடாளுமன்றத் தேர்தலில் மலைவாழ் மக்கள் வாக்களிக்க உள்ளனர் தேர்தல் அதிகாரிகள் தகவல் !

நாடாளுமன்றத் தேர்தலில் மலைவாழ் மக்கள் வாக்களிக்க உள்ளனர் தேர்தல் அதிகாரிகள் தகவல் !

வாக்கு

திருப்பூர் நாடாளுமன்றத் தேர்தலில் 1529 மலைவாழ் மக்கள் வாக்களிக்க இருப்பதாக தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் 1529 மலைவாழ் மக்கள் வாக்களிக்க உள்ளனர் தேர்தல் அதிகாரிகள் தகவல் திருப்பூர், மார்ச். 26: திருப்பூர் நாடாளுமன்ற தேர்தலுக்கு உட்பட்டு 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஒட்டுமொத்தமாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 1744 வாக்குச்சாவடிகள் உள்ளன. 7 லட்சத்து 86 ஆயிரத்து 475 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 11 ஆயிரத்து 718 பெண் வாக்காளர்களும், 250 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 15 லட்சத்து 98 ஆயிரத்து 443 பேர் உள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கோடாந்தூர், மாவடப்பு மற்றும் தளிஞ்சி ஆகிய 3 மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதிக்கு வாக்களிக்க உள்ளனர். இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறும் போது, “உள்ளாட்சித் தேர்தல் வாக்குரிமை கடந்த தேர்தலின் போது தான் கொண்டுவரப்பட்டது. ஆனால் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பல ஆண்டுகாலமாக மலைவாழ் கிராமங்களை சேர்ந்த செட்டில்மென்ட் வாக்களித்து வருகின்றனர். கோடாந்தூர், மாவடப்பு மற்றும் தளிஞ்சி ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் 749 ஆண்கள் மற்றும் 780 பெண்கள் என மொத்தம் 1529 பேர் வாக்களிக்க உள்ளனர்” என தெரிவித்தனர்.

Tags

Next Story