கள்ளக்குறிச்சியில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

கள்ளக்குறிச்சியில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

ஆய்வு 

கள்ளக்குறிச்சியில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார்.
ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தேர்தல் தொடர்பான பணிகளை கண்காணித்திடும் பொருட்டு தேர்தல் பொது பார்வையாளராக அசோக்குமார் கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். லோக்சபா தேர்தலையொட்டி மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஓட்டுசாவடி மையங்களில் மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் மற்றும் ரோடுமாமந்துார் கிராமங்களில் உள்ள ஓட்டுசாவடிகளில் மின்சாரம், குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகள் வந்து செல்லக்கூடிய சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில், வாக்காளர்கள் ஓட்டளிக்க ஏதுவாக அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags

Read MoreRead Less
Next Story