சங்கராபுரத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

சங்கராபுரத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

 ஆய்வு

சங்கராபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் உள்ள மையங்ககளை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் அசோக்குமார் கார்க் ஆய்வு செய்தார். ஓட்டுச்சாவடி மையங்களில் குடிநீர் வசதி, கழிவறை வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா என்று கேட்டறிந்தார். பின்னர் பதட்டமான ஓட்டுச்சாவடி மையங்களை பார்வையிட்டார். உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதா, தாசில்தார் கோபாலகிருஷ்ணன், தேர்தல் துணை தாசில்தார் தேவதாஸ்,வருவாய் ஆய்வாளர் கல்யாணி, வி.ஏ.ஓ. ஜெயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story