தேர்தல் பாதுகாப்பு பணி - 450 துணை ராணுவ வீரர்கள் வருகை !

தேர்தல் பாதுகாப்பு பணி - 450 துணை ராணுவ வீரர்கள் வருகை !

 போலீஸ்

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 450 பேர் கேரளாவிலிருந்து ஐந்து கம்பெனி துணை ராணுவ வீரர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை வர இருக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதம் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- கன்னியாகுமரி நாடாளுமன்ற பொது தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து கடந்த 17 ஆம் தேதி முதல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. குமரி மாவட்டத்தில் மொத்தம் 15 லட்சத்து 55 ஆயிரத்து 96 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாதபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1698 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படுகிறது. இதில் 199 வாக்குச்சாரி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பிற்கு ஏற்கனவே ஒரு கம்பெனி துணை ராணுவ வீரர்கள் குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். மேலும் கேரளாவிலிருந்து ஐந்து கம்பெனி துணை ராணுவ வீரர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை வர இருக்கின்றனர். இதில் மொத்தம் 450 பேர் அடங்குவர். இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரின் கொடி அணிவகுப்பு நடைபெறும். என தெரிவித்தார்.

Tags

Next Story