தேர்தல் பயிற்சி முகாம்

தேர்தல் பயிற்சி முகாம்
X

பயிற்சி முகாம்

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது.

நத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான பயிற்சி முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் முருகேஸ்வரி தலைமை தாங்கினார். தேர்தல் துணை வட்டாட்சியர்கள் டேனியல்பிரேம்குமார், ரவிக்குமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நத்தம் பகுதியில் உள்ள பதற்றமான வாக்குசாவடிகளை கண்டறிவது, தொகுதி அளவில் வாக்குசாவடிகளில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் செய்து தருவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் பயிற்சி முகாமில் விளக்கி கூறப்பட்டது.

Tags

Next Story