திருப்பூரில் தேர்தல் வாக்குப்பதிவு பயிற்சி முகாம்.
திருப்பூரில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலருக்கான பயிற்சி அளித்து பணிகளுக்கான ஆலோசனை வழங்கப்பட்டது.
திருப்பூரில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி நடந்தது. திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தலைமையில் மாநகராட்சி கூட்டரங்கில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ளடங்கிய 114-திருப்பூர் (தெற்கு) சட்டப்பேரவை தொகுதிக்குட்பட பகுதிகளில் தேர்தல் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சி அளித்து பணிகளுக்கான ஆலோசனை வழங்கப்பட்டது.
அப்போது துணை ஆணையாளர் சுந்தரராஜ், துணை மாநகர பொறியாளர் த செல்வநாயகம், தேர்தல் துணை வட்டாச்சியர்வசந்தா, உதவி ஆணையாளர் வினோத், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Next Story