தேர்தல் விதிமீறல் - பாமக வேட்பாளர் உட்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு

தேர்தல் விதிமீறல் - பாமக வேட்பாளர் உட்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு

போலீசாருடன் தள்ளு முள்ளு

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக சேலம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் அண்ணாதுரை உள்ளிட்ட 50 பேர் மீது 3 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் அண்ணாதுரை போட்டியிடுகிறார். இவர் நேற்று (27.03.2024) வேட்பு மனுவை தாக்கல் செய்ய தனது ஆதரவாளர்களுடன் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தேர்தல் விதிமுறைகளின் படி ஐந்து பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவதாக கூறி மற்றவர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது அங்கு கூடியிருந்த 50க்கும் மேற்பட்டோர் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை எடுத்து இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் அலுவலர் காலாசாமி சேலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் பாமக வேட்பாளர் அண்ணாதுரை உட்பட அவரது ஆதரவாளர்கள் 50 பேர் மீது காவல்துறையினர் அனுமதியின்றி கூட்டம் கூடுதல், தேர்தல் விதிமீறல்கள் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

Tags

Next Story