கேரளாவில் தேர்தல்: குமரி எல்லையில் போலீசார் தீவிர சோதனை
எல்லையில் போலீசார் தீவிர சோதனை
இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு உட்பட 21- மாநிலங்களில் கடந்த 19-ஆம் தேதி நடந்து முடிந்தது. இரண்டாம் கட்டமாக கேரளா உட்பட 13- மாநிலங்களில் நேற்று 26-ம் தேதி 89- தொகுதிகளில் நடைபெற்றது.
கேரளாவில் மட்டும் 20- தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது, இந்த தேர்தல் காலை 7 மணி உதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது,, குமரி- கேரளா எல்லை பகுதிகளான களியக்காவிளை, படந்தாலுமூடு, கோழிவிளை, கொல்லங்கோடு, பளுகல், புலியூர்சாலை போன்ற சோதனை சாவடிகளில் தமிழக மற்றும் கேரளா போலீசார் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர், பணம் மற்றும் மதுபானங்கள் கொண்ட செல்லப்படுகிறதா என தீவிரமாகவாகனங்களை கண்காணித்தனர்.
மேலும் எல்லையோர பகுதியில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள், லாட்ஜில் ஆகியவற்றை தீவிரமாக கண்காணித்தனர். மேலும் போதை ஆசாமிகளை கேரளா எல்லை பகுதிக்குள் நுழையவிடாமல் போலீசார் கண்காணித்தனர்.