வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம்


பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளில்லும் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடைபெறுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 147. பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடிகளும் 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்கு சாவடிகளும் என மொத்தம் 652 வாக்கு சாவடிகள் உள்ளன, இதில், இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2024-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் அக்டோபர் 27ம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது.

இதற்கென்று சிறப்பு முகாம்கள் நவம்பர் 4ம் தேதி இன்றும் நவம்பர் ஐந்தாம் தேதி நாளையும், - மாவட்டம் முழுவதும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், இதில் நவம்பர் நாலாம் தேதி இன்று, துறையூர் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி எளம்பலூர் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தோமினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடைபெற்று வருகிறது.

இதில் 18 வயது நிறப்பிய புதிய வாக்காளர்கள் தங்கள் பெயரினை பதிவு செய்தனர், மேலும் வாக்காளர்கள், திருத்தம் மேற்கொள்வதற்காக முகாம்களில் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.

Tags

Next Story