தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு

தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு 

தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு சுருக்க திருத்த முகாம் அண்மையில் நடைப்பெற்றது. இந்த முகாம்களில் மொத்தமாக 13, 848 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில் அரியலூர் நகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வெங்கடலாசலம் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமில் விண்ணப்பம் அளித்தவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களின் உண்மைதன்மை குறித்து ஆய்வு செய்தார். மேலும் அவர்களிடம் வயது, முகவரி உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவிலும் ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா மற்றும் அரசுதுறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story