தேர்தல் பணி மண்டல அலுவலர் பயிற்சி வகுப்பு
ஆய்வு கூட்டம்
மக்களவைப் பொதுத்தேர்தல் 2024-ல் தேர்தல் பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியல் கற்பகம்,, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்த போது, பெரம்பலூர் மாவட்த்தில் உள்ள 147.பெரம்பலூர் தனி சட்டமன்ற தொகுதிக்கு 37 மண்டல அலுவலர்களும், 148.குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு 34 மண்டல அலுவலர்களும் என மொத்தம் 71 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மண்டல அலுவலர் தலைமையிலும் ஒரு மண்டல உதவியாளர், ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பணிகள், மற்றும் அடிப்படை வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை மண்டல அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். தேர்தல் வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையான முறையில் நடைபெற அனைத்து அலுலவர்களும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், மாவட்ட ஆட்சியரின் தேர்தல் நேர்முக உதவியாளர் விஜயா, தேர்தல்பிரிவு வட்டாட்சியர்கள் சிவா, அருளானந்தம் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் கலந்துகொண்டனர்