ஒரகடம் சிப்காட் சாலையில் திறந்த நிலையில் மின்பெட்டி: மக்கள் அச்சம்

ஒரகடம் சிப்காட் சாலையில் திறந்த நிலையில் மின்பெட்டி: மக்கள் அச்சம்

திறந்த நிலையில் உள்ள மின்பெட்டி 

ஒரகடம் சிப்காட் சாலைகளில் திறந்த நிலையில் உள்ள மின்பெட்டிகளால், ஊழியர்கள் மின் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட் சாலைகளில் திறந்த நிலையில் உள்ள மின்பெட்டிகளால், தொழிற்சாலைகளுக்கு நடந்து வேலைக்கு செல்லும், ஊழியர்கள் மின் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர். ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் ஒரு பகுதியான,

வைப்பூர், எறையூர் பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இதில், வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். அவ்வாறு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரும்பாலும், கிருஷ்ணா கல்லுாரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து, சிப்காட் சாலை வழியே நடந்து சென்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த சிப்காட் சாலை நடைபாதையில் உள்ள மின் பெட்டி ஆபத்தான நிலையில் திறந்து உள்ளது.

இதனால், நடைபாதையில் நடந்து செல்லும் ஊழியர்கள் எதிர்பாராத விதமாக, மின்பெட்டியில் கை வைத்தால், மின்விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர். மேலும், தற்போது அடிக்கடி மழை பெய்து வரும் நிலையில், திறந்த நிலையில் உள்ள மின்பெட்டியில் இருந்து, மின் கசிவு ஏற்பட்டு, உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட ஒரகடம் சிப்காட் அதிகாரிகள், சிப்காட் சாலைகளில் திறந்த நிலையில் உள்ள மின் பெட்டியை, முறையாக பராமரிக்க வேண்டும் என, ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story