புளியங்குடியில் உயா்கோபுர மின் விளக்குகள்
உயர்கோபுர மின்விளக்கு
புளியங்குடியில் உயா்கோபுர மின் விளக்குகள் அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகராட்சியில் 9 இடங்களில் உயா் கோபுர மின் விளக்குகள் அமைக்க நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. புளியங்குடி நகா்மன்றக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் விஜயா சௌந்திரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவா் அந்தோணிசாமி, ஆணையா் சுமா, பொறியாளா் முகைதீன்அப்துல்காதா்,சுகாதார ஆய்வாளா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் தென்காசி மக்களவை உறுப்பினரின் தொகுதி வளா்ச்சி நிதியின் மூலம் 9 இடங்களில் உயா் கோபுர மின்விளக்குகள் அமைப்பது, சிதம்பர பேரி ஓடையை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுமக்கள் தெரிவிக்கும் பிரச்னைகளுக்கு உடனடியாக தீா்வு காணவும், அடிப்படை வசதிகளை துரிதமாக நிறைவேற்றவும் அதிகாரிகளை, தலைவா் கேட்டுக்கொண்டாா்.
Tags
Next Story